2020 நவம்பர் 25, புதன்கிழமை

வீதி விபத்துக்குள்ளான தபாலதிபர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் மரணம்

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.ஏ.ஹூஸைன்)

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு, கொம்மாந்துறையில் வைத்து வீதி விபத்துக்குள்ளான ஏறாவூர் தபால் அதிபர் உஷாதேவி தெய்வநாயகம் (57 வயது) கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த சமயம் சிகிச்சை பயனளிக்காது மரணமானார்.

ஏறாவூர் தபாலகத்தில் இருந்து கடமை முடிந்து வீடு செல்லும் வழியில் கொம்மாந்துறையில் வைத்து இந்த வீதி விபத்து நிகழ்ந்தது. தனது கணவருடன் துவிச்சக்கர வண்டியில் அவர் சென்று கொண்டிருக்கும்போது விரைந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் தலையில் பலமாக அடிபட்ட அவர், முதலில் அருகிலுள்ள செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு - பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் அம்பாறையிலிருந்தும் அவசர மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் புதன் இரவு ஏழரை மணியளவில் மரணமானார். காயங்களுக்குள்ளான உஷாதேவியின் கணவர் தெய்வநாயகம் தற்போது செங்கலடி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பான விசாரைணகள் ஏறாவூர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .