2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

ஆஸிக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் முகவர் கைது

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பிலிருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை படகில் அனுப்பி வந்ததாக கூறப்படும் முகவர் ஒருவரை குற்றப்புலனாய்வு பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து  ஆட்களை படகில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வந்தார் எனும் சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு கல்லடி முகத்தவாரத்தை சேர்ந்த நிரஞ்சன் டட்லி என்பவNர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப்புலனாய்வு பொலிசார் இவரை நேற்றிரவு கைது செய்து விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மட்டக்களப்பிலிருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்றுக் கொண்டிருந்த 116 பேர் மட்டக்களப்பு வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .