2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

திருமதி இராஜேஸ்வரி தியாகராஜா

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: திருமதி இராஜேஸ்வரி தியாகராஜா

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் வடகோப்பாய் பிராம் பற்றையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரா ஜேஸ்வரி தியாகராஜா 25.10.2010 திங்கட்கிழமை கால மானார்.

அன்னார் காலஞ்சென்ற ஈ.எஸ்.தியாகராஜா (ஓய்வுபெற்ற பிரதம தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பொன்னுச்சாமி தம்பதிகளின் அருமை மகளும் காலஞ்சென்ற எம்.பி.கணேசன் (லண்டன்) அவர்களின் அருமைச் சகோதரியும் நெட்டிலிப்பாய், கோண்டாவிலைச் சேர்ந்த செல்லப்பா கனகம்மா தம்பதியரின் அருமை மருமகளும், வாசுகி , வரதராஜன் (கிராம சேவகர், ஊரெழு), யோகராஜன் (கனடா), செம்மனச்செல்வி (ஆசிரியை, வ-இறம்பைக்குளம் ம.ம.வித்தியாலயம்), இராஜராஜன் (பிரான்ஸ்), சிவசக்தி (ஆசிரியை, நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும் எஸ்.நவரட்ணம் (வருகை விரிவுரையாளர், வ - தொழில்நுட்பக் கல்லூரி, வவுனியா  வளாகம்), திருமதி இராஜாம்பிகை வரதராஜன், திருமதி மாலதி யோகராஜன் (கனடா), இ.தேசிகன் (வவுனியா), திருமதி சுசீலா இராஜராஜன் (பிரான்ஸ்), ஜெயராஜா (யாழ். தினக்குரல்) ஆகியோரின் அன்பு மாமியாரும் இராஜகீர்த்திகன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி), இராஜமித்திரன் (யாழ்.இந்துக்கல்லூரி), சித்திராங்கி (வேம்படி மகளிர் கல்லூரி), சாயிமீரா (கனடா), கேசவன் (வ-இறம்பைக் குளம் ம.ம.வித்தியாலயம்), சாருகேசி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 26.10.2010 செவ்வாய்க் கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வடகோவை கந்தன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
                   

தகவல்: குடும்பத்தினர்
எஸ்.ரி.வரதராஜன்
(கிராம அலுவலர், கோப்பாய்)

இலுப்பையடிப் பிள்ளையார் கோயில் வீதி,

பிராம்பற்றை,

கோப்பாய் வடக்கு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .