Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 17 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடுநுவரை பிரதர்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 48ஆவது ஊடக செயலமர்வு, '21ஆம் நூற்றாண்டில் ஊடகம்' எனும் தொனிப்பொருளில் கண்டி உடுநுவரை வளய தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்காக ஹந்தஸ்ஸ அல்-மானார் தேசிய பாடசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை (19) நடைபெறவுள்ளது.
இந்த செயலமர்வு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் காலை 09 மணியளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஊடகத்துறை சார்ந்த அறிவை பாடசாலை மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் நோக்கில் நாட்டின் முன்னணி ஊடகவியலாளர்கள் வளவலர்களாக கலந்துகொண்டு இந்த ஊடக செயலமர்வை நடத்தவுள்ளனர்.
இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வான சான்றிதல் வழங்கும் நிகழ்வு, மாலை 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.
சான்றிதல் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கம்பளை ஒராயன் தேயிலை தொழிற்சாலையின் உரிமையாளர் அல்-ஹாஜ் என்.எம்.எம். ஷபீக் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன், கௌரவ அதிதியாக அல் - மானார் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஜே.எம். ஹிஜாஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
37 minute ago
45 minute ago
2 hours ago