2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கசிப்பு காய்ச்சிய இருவர் கைது

பாலித ஆரியவன்ச   / 2017 மே 29 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹப்புத்தளை கிளேனோர் தோட்டத்தில், கசிப்பு காய்ச்சிய 34,31 மற்றும் 36 வயதுகளுடைய மூவரை, ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்துள்ள பதுளை பொலிஸார், அவர்களிடமிருந்து 16 கசிப்பு போத்தல்கள், ஆறு கோடா பெரல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கிளேனோர் தோட்டத்தைச் சேர்ந்த மூவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, மேற்படி பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த நிலையில் மேற்படி மூவரையும் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் கசிப்பை காய்ச்சி, ஹப்புத்தளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு, விநியோகித்து வந்துள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .