கு. புஷ்பராஜ் / 2019 நவம்பர் 21 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சத்யசாயி பாபாவின் 94ஆவது ஜனன தினத்தையொட்டி, சாயி சர்வதேச பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களின் ஏற்பாட்டில், சனிக்கிழமை (23), ஜனன தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலவாக்கலையில் இயங்கும் ஸ்ரீ சத்தியசாயி வித்யா நிலையத்தின் இயக்குனர்
வே கருணாராசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
காலை 5.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில், ஸ்ரீ சாயி நிலையத்தில், ஓங்காரம் சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் பஜனை இடம்பெற்று மாலை 5 மணியளவில் திருவூஞ்சல் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் இரண்டாவது நாளான 30ஆம் திகதி, ஸ்ரீ சாயி நிலைய மனிதவிழுமிய வகுப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சி, தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்று, தொடர்ந்து சுவாமியின் 94ஆவது ஜனனதின விழா நடைபெறும்.
இதில், அனைவரையும் கலந்துகொண்டு ஆசி பெறுமாறு, ஏற்பாட்டுக்குழுவின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago