Editorial / 2020 மார்ச் 15 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை, கொரோனா தொற்றிலிருந்துப் பாதுகாக்கும் நோக்கில், தலதா மாளிகையில் விசேட சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என, ஸ்ரீ தலதா மாளிகையில் தியவதனே நிலமே பிரதீப் நிலங்க தெரிவித்தார்.
கண்டியில், நேற்று முன்தினம் (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மூன்று கட்டங்களாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்டமாக, ஸ்ரீ தலதா மாளிகைக்கு உட்பிரவேசிக்கும் அனைவரும் தமது கைகள், கால்கள், முகத்தைக் கழுவுவதற்குத் தேவையான நீர், கிருமிநீக்கி போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இரண்டாவது கட்டமாக, தேசிய மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட கிருமிநீக்கித் திரவமொன்று சுற்றுலா பயணிகளுக்கு அருந்துவதற்காக வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மூன்றாவது கட்டமாக, உள்நாட்டு மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தி, புகைப் பிடிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago