Kogilavani / 2016 ஜூலை 15 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சானது, பெருந்தோட்ட மக்களின் நன்மை கருதி, பிரதேச மற்றும் மாவட்ட ரீதியில் மக்கள் சந்திப்புகளை நடத்திவருகின்றது. இந்நிலையில், அடுத்த மக்கள் சந்திப்பு, தலவாக்கலையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'ஹட்டன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு வெற்றியளித்துள்ளது. கடந்த காலங்களில் தகரம், சீமெந்து, நாற்காலிகள், கூடாரங்கள் என கேட்டு வந்த மலையக மக்கள், இன்று வீடு, காணி உரிமை, வாழ்வாதார உரிமைகளைக் கேட்டே, அமைச்சர் ப.திகாம்பரத்தைச் சந்திக்க வருகின்றனர்.
இந்த மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட 80 சதவீதமானோர், லயன் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, தனி வீடு மற்றும் காணி உரிமை என்பவற்றைப் பெற்றுத்தாருங்கள் என்ற கோரிக்கைகளையே முன்வைத்து வருகின்றனர்.
இச்சந்திப்பின்போது, தோட்ட நிர்வாகத்தினால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தொழிற்சங்கப் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக்கூறினர். இதனை கவனத்திற்கொண்ட அமைச்சர், உடனடியாக தோட்ட அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தீர்வைப் பெற்றுக்கொடுத்தார்.
இதேவேளை, தொடர்புகொள்ள முடியாத தோட்ட அதிகாரிகளிடம் நேரடி சந்திப்புகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, தமது அதிகாரிகளுக்கு பணித்தார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025