Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 27 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், மலையக மக்களைக் கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது, கண்டிக்கதக்கது என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையின் தேசிய வருமானத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையக மக்களை இவ்வாறு இழிவுபடுத்துவது என்பது, மலையக மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கவலையடைய வைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மலையக மக்கள், இந்நாட்டின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்களைக் கொச்சைப்படுத்துவதை, தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதாவுல்லாஹ்வின் இந்தக் கருத்துக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் என்றும் அனால், இந்தக் கண்டனத்தைத் தெரிவிப்பதற்கு, அவர்களுக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது என்றும் ஏனெனில், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கிளிநொச்சியில் வாழும் மலையக மக்களை மிக இழிவான வார்த்தை பிரயோகத்தின் மூலம் விமர்சித்திருந்தார் என்றும் அவர் கூறினார்.
இவ்விடயம், சமூகவலைத்தளங்களில் பரவலாக வந்திருந்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் பங்காளிக் கட்சிகளும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், கூட்டமைப்பின் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக எந்தவித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மலையக மக்கள் தொடர்பாக கீழ்தரமான சொற் பிரயோகத்தை மேற்கொண்டமைக்குக் கண்டனத்தை வெளியிட்டிருந்தால், இன்று அதாவுல்லாஹ் இவ்வாறு பேசியிருக்க மாட்டார் என்றும் அவர் கூறினார்.
எனவே, தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினையை விதைக்கும் வகையிலான அரசியல் செயற்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago