2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நுவரெலியா மத்திய சந்தை தற்காலிகமாக இடமாற்றம்

Kogilavani   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்   

நுவரெலியா பிரதான வீதியில், கடந்த 54 வருடங்களாக இயங்கி வந்த மத்திய சந்தை, தற்காலிகமாக புதிய இடத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளது.  

மேற்படி நகரின் பழைய சந்தையை, நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு, நுவரெலியா மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.   

இதன் காரணமாகவே, மேற்படி சந்தையில் அமைக்கப்பட்டிருந்த வியாபார நிலையங்கள் அனைத்தும், புதிய இடத்தில் தற்காலிகமாக இயங்கவுள்ளன.  

இதற்கமைவாக பழைய சந்தையானது செவ்வாய்க்கிழமை (11) மூடப்பட்டதுடன், நுவரெலியா விக்டோரியா பூங்காவுக்கு அருகில், தேசிய உணவகம் அமைந்துள்ள பகுதியில் தற்காலிக சந்தை, நேற்று (12) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.   

பழைய மத்திய சந்தைக் கட்டத் தொகுதியிலிருந்து அகற்றப்பட்ட 48 கடைத் தொகுதிகளும் புதிய இடத்தில் இயங்கவுள்ளன.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--