2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பதுளையில் திடீர் சோதனை: 107 பேர் கைது

Kogilavani   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து விதிகளை மீறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுக்களுடன் தொடர்புடைய 107 பேரை, பதுளை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

பதுளை நகரில், ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின்போதே, மேற்படி 107 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், போக்குவரத்து வீதிகளை மீறியக் குற்றச்சாட்டின்பேரில் 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பாலியல் வன்புறவு, வீடுகளை உடைத்து கொள்ளையிட்டமை, சட்டவிரோதமாக மதுபானம் விற்றமை போன்ற குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில், நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த 16 பேரும் இதன்போது கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .