Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
'இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வை தேடுவதற்கான உள்ளூர் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் யோசனைகள் அடங்கிய வரைபின் ஆறாவது அத்தியாயத்தின் மூலம், முற்றிலும் தேசிய பொறிமுறை ஒன்றினூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இது எமது நாட்டுக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்' என நீதியும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
'இனப்பிரச்சினையை வைத்துகொண்டு அரசியல் இலாபம் தேடும் கட்சிகளுக்கும் இது பாரிய அடியாகும். நேர்மையானவர்களால்; மேற்கொள்ளப்படும் பக்கச்சார்பற்ற விசாரணையே இந் நாட்டு மக்களது நீண்ட கால எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது' என்று அவ்வமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
'வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள் உட்பட வெளிநாட்டவர்களது எவ்வித தலையீடுமின்றி தேசிய பொறிமுறையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதையே எமது அமைப்பு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றது. தாமதித்தேனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது பாராட்டுக்குரியது.
அதேபோன்று இன்று நாட்டில் தலைதூக்கி உள்ள சிறுவர் துஷ்பிரயோகம், பாரிய குற்றச் செயல்கள் போன்றவற்றை விசாரிப்பதற்கும் நேர்மையான பக்கச்சார்பற்ற ஒரு நீதித்துறை அவசியமாகும்;' என அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளது.
13 minute ago
34 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago
43 minute ago