2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் பாதிப்பு

ஆ.ரமேஸ்   / 2017 மே 29 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


 
நுவரெலியா-கந்தப்பளை பிரதான வீதி, ஹாவாஎலியவில் இன்று அதிகாலை வீசிய கடுங்காற்று காரணமாக, பாரிய மரங்கள் மூன்று முறிந்து, மின்கம்பங்களின் மீது விழுந்ததில், கந்தப்பளை பகுதிக்கான மின் விநியோகம் பல மணி நேரம் தடைப்பட்டிருந்ததாக, நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஹாவாஎலிய மற்றும் கந்தப்பளை பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸாரும் மின்சார சபை ஊழியர்களும் இணைந்து, மரங்களையும் மின் கம்பங்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X