2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மரை இறைச்சியுடன் மூவர் கைது

Princiya Dixci   / 2017 மே 20 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மஸ்கெலியா, லக்கம் பிரதேசத்தில் இறைச்சிக்காக மரையை வேட்டையாடிய மூவரை, நல்லத்தண்ணி அதிரப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

சிவனொளிபதமலை வனப்பகுதியில் வேட்டையாடி, மரையை வெட்டி இறைச்சியாகிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலே, மேற்படி மூவரையும் நேற்றுக் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, 15 கிலோகிராம் மரை இறைச்சியைக் கைப்பற்றியதுடன், மிருக வைத்திய அறிக்கையின் பின் மூவரும், மஸ்கெலியா பொலிஸாரிடம இன்று ஒப்படைக்கப்பட்டனர்.

வழக்குப் பதிவு செய்து, ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் சந்தேகநபர்கள் மூவரையும் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X