செ.தி.பெருமாள் / 2019 நவம்பர் 28 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில், இன்று (28) அதிகாலை சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வந்த 400க்கும் மேற்பட்டவர்கள், மாவட்ட வைத்திய அதிகாரியும் வைத்திய அதிகாரிகள் இருவரும் சுகயீன விடுமுறை பெற்றுச் சென்றமையால், சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமத்துக்கு முகங்கொடுத்தனர்.
இந்நிலையில், சாமிமலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் உதவி சுகாதார வைத்திய அதிகாரியுமே, நேற்று தற்காலிகமாக சிகிச்சைகளை வழங்கி வந்தனர்.
இது தொடர்பாக, மாவட்ட உயரதிகாரியான சேனக்க தலகலவிடம் வினவியபோது, வைத்தியர்கள் மூவரும் சுகயீன விடுமுறையில் உள்ளமையாலேயே, இந்நிலை ஏற்பட்டது என்றும் இந்த வைத்தியசாலையின் மொத்த குறைபாடுகளையும் நீக்க வேண்டும் என்றால், 30 வைத்தியர்களாவது உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025