2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

’வாக்களித்த மக்களுக்கு நன்றி’

Editorial   / 2019 நவம்பர் 17 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்,  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேண்டுகோளை ஏற்று, புதிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களித்த நுவரெலியா மாவட்டம் உட்பட ஏனைய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கும்,  இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக,  தொலியாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் ப. திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், நேற்று (17)  விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,  “2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எமது வேண்டுகோளை ஏற்று  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த எமது மக்கள்,  இம்முறை புதிய ஜனாநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருந்தார்கள். எனினும் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. அதேநேரம் எம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

“அரசியல் என்று சொல்லும் போது,  வெற்றி தோல்வி, ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில்,  தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றேன். அதேபோல், எமது மக்களுக்குத் தேவையான சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் தயாராக இருக்கின்றேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான்கரை ஆண்டுகளாக உருப்படியான சேவை செய்த ஆத்ம திருப்தி இருக்கின்றது.

“அதேபோல், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் இருந்து நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 174,413 வாக்குகளையும் நுவரெலியா மாவட்டத்தில் மொத்தமாக 270,209 வாக்குகளையும் வழங்கிய கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனைத் தொகுதி மக்களுக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் அதன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. எதிர்வரும் காலங்களில்,  எமது அரசியல் செயற்பாட்டுக்கு மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்களுக்கான எனது அர்ப்பணிப்பு மிகுந்த சேவையை வழங்க என்றும் தயாராக இருக்கின்றேன்” என்றும் தெரிவித்துள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .