2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

வீட்டிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்ட வீட்டின் அறை ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் நேற்று (04)  மாலை 03மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறுவனின் சகோதரன் பாடசாலை விட்டு வீடு வந்து பார்த்த போது இந்த சிறுவன் சடலமாக இருந்ததை கண்டு கூச்சலிட்டதை அடுத்தே பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்பிரிவு
தோட்டத்தைச்சேர்ந்த 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் மூத்தபிள்ளையான இவர், கொழும்பு பகுதியில் ஆறுமாத காலம் தொழிபுரிந்து தற்பொழுது வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X