2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

வீரையாவை கண்டால் தகவல் தரவும்

Gavitha   / 2016 ஜூலை 23 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் மேற்பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட  ரவி என்று அழைக்கப்படும் வீரையா ஜெயசங்கர் (வயது 49) என்பவரை, கடந்த 6 மாத காலமாக காணவில்லை என்று தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு தொழில் நிமித்தம் சென்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான அவர், இறுதியாக இவ்வருடம் தைப்பொங்கலுக்கு வீட்டுக்கு  வந்து சென்றதாகவும் அதன் பின்னர் அவர் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் 0522258222 என்ற தலவாக்கலை பொலிஸ் நிலைய தொலை பேசி இலக்கத்துக்கும் வீரைய்யா: 0729655843 என்ற அலைபேசி இலக்கத்துக்கும் தொடர்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்னர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .