2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

புத்தல வீதி விபத்துக்களில் இருவர் பலி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம். தாஹிர் )

மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தல பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வெவ்வேறு விபத்துக்களில் கர்ப்பிணி தாயொருவரும், இன்னும் ஒரு நபரும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக புத்தலப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளை பஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்த தனியார் பஸ்ஸொன்றுடன் மோதி  
குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.  

பலியானவர் அதே பிரதேசத்தை சேர்ந்த சில்வா (வயது 57) எனப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

புத்தல மாவட்ட வைத்தியசாலையில் தாய், சேய் சிகிச்சை நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பும்போது புத்தல வைத்தியசாலைக்கு முன்னால் வெள்ளவாய பிரதேசத்தில் இருந்து வந்த லொறி ஒன்று குறித்த கர்ப்பிணி தாயின் மீது மோதியதில் கர்ப்பிணித்தாய் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

 புத்தல பிரதேசத்தை சேர்ந்த சு.ஆ.சுசிலாவதி (வயது 30) என புத்தல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--