2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

மலையகத்தில் கடும் மழை

Super User   / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மலையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அடை மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மத்திய மாகாணத்தில் நுவரெலியா,கண்டி ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் அடை மழை பெய்தது.

நாவலப்பிட்டி பகுதியில் இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை பெய்த அடை மழையினால் நாவலப்பிட்டி நகரின் கண்டி வீதியில் வெள்ளம் பரவியது. இதனால் நாவலப்பிட்டியிலிருந்து கண்டிக்கான வாகனப் போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது. அத்துடன் நகரின் வங்கிகள், வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தமையால் சில சேதங்கள் ஏற்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .