2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஆபாச வீடியோ விற்ற இளைஞர் கைது

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி தெல்தெனியா நகரில் ஆபாச வீடியோ படங்களையும் புகைப்படங்களையும் இரகசியமான முறையில் விற்பனை செய்து வந்ததாக கூறப்படும்  24 வயதுடைய இளைஞர் ஒருவரை தெல்தெனியா பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

இவர், தமது கணினியில் இணையத்தளங்கள் மூலம் ஆபாச காட்சிகளுடைய வீடியோப் படங்களையும் புகைப்படங்களையும் தரவிறக்கம் செய்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தெல்தெனியா நீதிமன்றத்தில் முன் ஆஜர் செய்ய பொலிஸார் ஏற்பாடுகளை மேற் கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X