2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கோழி திருடிய வேட்பாளர்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

ஹிங்குராங்கொடை பிரதேசசபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிரதான கட்சியொன்றின்  வேட்பாளரொருவர் ஐந்து கோழிகளை திருடினாரென்ற சந்தேகத்தின் பேரி;ல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரணை பிரதேசத்திலுள்ள கோழிப்பண்ணையொன்றுக்குள்  புகுந்த  இவ்வேட்பாளர், உணவுக்காக கோழிகளைத்  திருடிக் கொன்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.  

தனது நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருந்த குறித்த நபர், அவர்களுக்காக  கோழிகளை திருடியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--