2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

உணவு நஞ்சானதால் இருநூற்றுக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில்

Super User   / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.கோகிலவாணி)

தலவாக்கலையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போது,  உணவு நஞ்சானதால் சுமார் 200 பேர் வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டதாக லிந்துலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 சிறுவர் தின நிகழ்வொன்றின் இறுதியில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட, தலவாக்கலை பகுதியிலுள்ள பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலர் அங்கு போதிய இடவசதிகள் இன்மையால் நுவரெலியா, கிளங்கன், கொட்டகலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக லிந்துலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிலரை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: ரஞ்சித் ராஜபக்ஷ)


 


  Comments - 0

 • saniyan Monday, 17 October 2011 04:14 AM

  இதற்கு உரிய காரணத்தை அறிந்து தவறு செய்தவரை மன்னிக்காது தன்டனை கொடுங்கள்.

  Reply : 0       0

  Nishanthan Monday, 17 October 2011 06:24 PM

  சிறார்களுக்கு உணவு சமைக்கும்போதாவது அக்கறை செலுத்த வேண்டாமா?

  Reply : 0       0

  S.Mohanarajan Monday, 17 October 2011 07:40 PM

  தவறு செய்தோர் தண்டிக்கப்பட வேண்டும். தலைவர்கள் நடிக்கும் களம் பிள்ளைகள் வாழ்க்கை இல்லை. சிறந்த வசதிகளுடனான வைத்திய சேவை மலையம் எங்கும் ஏற்படுத்த வேண்டிய நேரமும் காலமும் இதுவே. மக்கள் போராட வேண்டும்.

  Reply : 0       0

  sahabdeen Tuesday, 18 October 2011 09:30 AM

  இதல்லாம் அடிக்கடி இலங்கையில் நடக்கிறதுதான். சட்ட நடவடிக்கை எடுப்பார்கள். இப்போதைக்கு அதிகாரிகளுக்கு நேரம் இல்லை.

  Reply : 0       0

  xlntgson Tuesday, 18 October 2011 10:13 PM

  தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஆனால் இப்போது இலவச உணவு என்றால் பசியாக பட்டினியாக இருந்தாலும் வேண்டாம் என்று மறுக்க வேண்டியது வரும் போல் தெரிகிறது. திட்டமிட்ட சதியாக இருந்தால் கொலை முயற்சி போன்ற குற்றம் என்பதில் சந்தேகம் இல்லை. நிரூபிக்கப்பட்டால்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--