2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

நாவலப்பிட்டியில் கழிவுத் தேயிலையை சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த இரு சந்தேகநபர்கள் கைது

Menaka Mookandi   / 2011 நவம்பர் 15 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

நாவலப்பிட்டி, கொரகோயா பகுதியில் இருந்து கழிவுத் தேயிலையை சட்டவிரோதமாக ஏற்றி வந்த லொறியை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைப்பற்றிய நாவலப்பிட்டிய பொலிஸார், லொறியின் சாரதி உட்பட இருவரை கைது செய்துள்ளனர்.

இந்த லொறியில் சட்டவிரோதமாக உடுநுவர பகுதிக்கு கழிவுத் தேயிலை கொண்டு செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நாவலப்பிட்டி பாலத்திற்கு அருகில் லொறியை பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட இச்சந்தேக நபர்கள் போலி போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X