2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

நுவரெலியா - ஹட்டன் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நுவரெலியா - ஹட்டன் பிரதான பாதையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

குறித்த பிரதான பாதை புனரமைக்கப்பட்டு வருவதால் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதன் காரணமாக இந்த பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுவதாக பஸ் பேருந்த உரிமையாளர்களும் சாரதிகளும் ஒட்டுனர்களும் தெரிவிக்கின்றனர்.

இவர்களுடன் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சீ.பி.ரட்ணாயக்கவிடம் கேட்டபொழுது,

"வீதி போக்குவரத்து அபிவிருத்தி அதிகார சபையின் கவனத்திற்கு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் குறித்த பாதை அபிவிருத்தி செய்யும் நிறுவனத்துடன் கலந்துரையாடி பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த பாதை மோசமான நிலையில் உள்ளதை தானும் உணர்வதாக" அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .