2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஞானம்

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு இந்திய உயர் ஸ்தானிகர் வை.ஏ. சிங்ஹாவினால் கர்நாடக இசை கருவிகள் வழங்கும் நிகழ்வு அதிபர் எஸ். சிவயோகதேவன் தலைமையில் கல்லூரியில்  வெள்ளிக்கிழமை(11) நடைபெற்றது.

இக் கல்லூரியானது  தற்போதய இந்திய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் சிவசங்கர்  மேனனின் பாட்டனாரான கே.வி.எஸ். மேனன் இலங்கை இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த காலப்பகுதியில் திறக்கப்பட்டது.

அவரின் மனைவி சரஸ்வதியின் ஞாபகமாக இந்த பாடசாலைக்கு சரஸ்வதி என பெயர் சூட்டப்பட்டது.  இதனால் இந்திய அரசிற்கும் இந்த பாடசாலைக்கும் பெரிய தொடர்பு இருக்கின்றது.
 இதனை அதிகரிக்கும் பொருட்டு இந்த பாடசாலை இந்திய அரசின் பூரண அனுசரனையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கண்டி உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜா, மத்தியமாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.சதீஸ், கம்பளை கல்வி வலய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் உட்பட நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X