2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ம.ம.மு.வும் மஹிந்தவுக்கு ஆதரவு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஞ்சித் ராஜபக்ஷ


'மலையக மக்களுக்களின் நன்மை கருதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு அபிவிருத்திகள் செய்திருக்கின்றார். இதனால் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வழங்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

தாவரவியல், பூங்கா மற்றும் பொழுதுபோக்கு பிரதி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவருமான வி.இராதாகிருஷண்னுக்கு தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

 'மலையகத்துக்கு செய்ய வேண்டிய இன்னும் சில அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து கட்சியின் ஆதரவை தெரியப்படுத்தவுள்ளேன்' என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .