Menaka Mookandi / 2011 ஜனவரி 25 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போது மலையகத்தைச் சேர்ந்த நான்கு கட்சிகள் இணைந்து மண்வெட்டி மற்றும் மயில் சின்னங்களில் போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
அந்தவகையில், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் மலையக தேசிய தொழிலாளர் சங்கம் ஆகிய கட்சிகளே இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளன.
மேற்படி கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஹட்டனில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்வெட்டி மற்றும் மயில் சின்னங்களில் போட்டியிடுவதென்ற இணக்கப்பாட்டுக்கு மேற்படி கட்சிகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago