2020 மே 28, வியாழக்கிழமை

கூட்டுறவு சங்க வர்த்தக நிலையங்களை மீளத் திறக்க நடவடிக்கை

Editorial   / 2020 மே 22 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தற்போது மூடப்பட்டுள்ள அனைத்து கூட்டுறவு சங்க வர்த்தக நிலையங்களையும் மீண்டும் திப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில், இன்று(22) நடைபெற்ற கொரோனா ஒழிப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், கொவிட் 19 தொற்று, வெள்ளம், மண்சரிவு போனற அனாத்தங்களால், கூட்டறவு சங்க வர்த்தக நிலையங்களின் அவசியத்தை மக்கள் உணர்ந்துள்ளார்கள் என்றார்.

பல்வேறு பொருளாதார சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காக கூட்டுறவு வியாபாரத்தில் சிறிது பின்னடைவுகள் இருந்தாலும் அதை ஒட்டுமொத்த சமூகத்திலிருந்து பிரிக்க முடியவில்லை என்றும் இரத்தினபுரி மாவட்டத்தில், தற்போது குருவிட்ட, இம்புல்பே, கொலோன்ன பம்பரபோட்டுவ, போன்ற பிரதேசங்களில் 6 புதிய கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 

எதிர்வரும் காலங்களில், சப்ரகமுவ மாகாணத்தில் கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்களை வலுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ மேலும் தெரிவித்தார்.

இதன்போது சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் ரஞ்ஜனி ஜயகொடி, இரத்தினபுரி மாவட்ட மேலதிகச் செயலாளர் உதய குமாரி, மாகாண கூட்டுறவுத்துறை ஆணையாளர் மயுர பிரசாத் அரந்தர, பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X