2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை

டுமோ பெருந்தோட்ட மக்கள் 146 பேர் பாதிப்பு

எம். செல்வராஜா   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, மடுல்சீமையிலுள்ள டுமோ பெருந்தோட்டப் பகுதியில், மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளமையால், 32 குடும்பங்களைச் சேர்ந்த 146 பேர், கல்லுள்ளை தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

குறித்த தொழிலாளர்களின் குடியிருப்புத் தொகுதிக்கு பின்புறத்திலுள்ள மண்மேடுடன் கூடிய கற்பாறைகள் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளமையாலேயே, இவர்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

இதேவேளை, வெலிமடை - தம்பவின்னை என்ற கிராமத்தில், மூன்று வீடுகள் மீது, மண்மேடு சரிந்து விழுந்தமையால், மூன்று வீடுகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்ட போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.   அத்துடன், பசறை - நமுனுகலை பிரதான பாதையில் கனவரல்லை என்ற இடத்தில் 14ஆவது மைல் கல்லருகே, நேற்று முன்தினம் (01) இரவு பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது. இதனால் பசறையிலிருந்து நமுனுகலை, பண்டாரவளை, எல்ல செல்லும் பாதையின் போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--