2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

’ரூ.1,000 விடயத்தில் அரசாங்கம் உறுதி’

Editorial   / 2021 மார்ச் 03 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் அடிப்படை சம்பளம் விடயத்தில், விரைவில் நல்ல தீர்வு கிடைக்குமெனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, இந்த விடயத்தில் அரசாங்கம் உறுதியாகச் செயற்படும் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (3)  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் 'இந்த அடிப்படைச் சம்பளம், தொழிலாளர்களுக்கு எப்போது கிடைக்கும்'  என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'சம்பள நிர்ணய குழுவில், இது குறித்துப் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதன்போது, பல்வேறு பிரச்சினைகள், காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், தற்போது அவை அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளன' என்றார்.

'கொஞ்சம் பொறுத்திருங்கள்; 10 வருடங்களாகக் காணப்பட்ட பிரச்சினை, தொடர்ச்சியாகப் பேசப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு இன்னும் 10, 15 நாள்களில்  நல்ல தீர்வு கிடைக்கும்' என, அமைச்சர் கெஹலிய நம்பிக்கை தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .