Super User / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
பேலியகொடையில் புதிதாக திறக்கப்பட்ட மீன் சந்தையில் மீன் வியாபாரிகளிடமிருந்து கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் பேலியகொட மாநகர சபையின் பிரதி மேயர் அமில நிஷாந்த குமாரசிங்க, களனி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் உட்பட 14 பேர் ஏப்ரல் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சந்தேக நபர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் நீதவான் பிரசன்ன டி அல்விஸ் முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சந்தேக நபர்களை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மீன் வியாபாரிகளிடமிருந்து கப்பம் பெறப்பட்டது மாத்திரமல்லாமல், மோதல் சம்பவமொன்றின் மீன் வியாபாரிகள் 6 பேர் காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பேலியகொடை மாநகர சபை பிரதி மேயர் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் நாமல் ராஜபக்ஷ, தனது கட்சிக்காரர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக வருமாறு அழைக்கப்பட்டதாகவும் அங்கு கப்பம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, கைது செய்யப்பட்ட நபர்கள் நீண்டகாமாக புறக்கோட்டை மீன் விற்பனை நிலையத்தில் பணியாற்றியவர்கள் எனவும் இச்சந்தை புறக்கோட்டையிலிருந்து பேலியகொடைக்கு மாற்றப்பட்ட பின்னர் வழக்கம்போல் தொழிலுக்குச் சென்றார்கள் எனவும் வழக்குரைஞர் கிங்ஸ்லி பெரேரா கூறினார். அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
2 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
25 Oct 2025