2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

மோசமான நகரங்களின் வரிசையில் கொழும்பு

Super User   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(டியன் சில்வா)

பொருளாதார மதிநுட்ப அலகு எனும் அமைப்பு மேற்கொண்ட வாழ்வதற்கு மோசமான 10 நகரங்களின் பட்டியல் கொழும்பு இடம்பெற்றுள்ளது.

இம்மாதம் வெளியிடப்பட்ட மேற்படி அமைப்பின் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் பட்டியலில் 140 நகரங்களில் கொழும்பு 131 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஸ்திரத்தன்மை, சுகாதார சேவைகள், கலாசாரம் மற்றும் சுற்றாடல், கல்வி, உட்டகட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
'வாழ்வதற்குப் பொருத்தமான எனும் எண்ணக்கருவானது இலகுவானது. உலகில் எந்த நகரம் மிக சிறந்த அல்லது மிக மோசமான சூழ்நிலையை வழங்குகிறது என்பதே இந்த எண்ணக்கருவாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வான்கூவர் நகரம் அதிக புள்ளிகளைப்பெற்று வாழ்வதற்குப் பொருத்தமான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மெல்போர்ன், சிட்னி, பேர்த், அடிலெய்ட், (அவுஸ்திரேலியா) டொரண்டோ, கல்கரி (கனடா) ஆக்லாந்து (நியூஸிலாந்து) ஹெல்சிங்கி (பின்லாந்து) வியன்னா (ஆஸ்திரியா) ஆகியன முதல் 10 இடங்களில் உள்ளன.

கொழும்புக்கு 48.5 புள்ளி கிடைத்துள்ளது. டகெர் (செனகல்), தெஹ்ரான் (ஈரான்), டௌலா (கெமருன்), கராச்சி (பாகிஸ்தான்) அல்ஜியர்ஸ் (அல்ஜீரியா) லாகோஸ் (நைஜீரியா) போர்ட் மோர்ஸ்பை (பப்வுவா நியூகினியா), டாக்கா (பங்களாதேஷ்) ஆகியன கொழும்பைவிட பின்னிலையில் உள்ளன. ஸிம்பாப்வேயின் தலைநகர் ஹராரே 37.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

கொழும்பில் 2010 ஆம் ஆண்டு உட்கட்டமைப்பு துறையில் பாரிய முதலீடுகள் செய்யப்பட்ட போதிலும் மேற்படி அமைப்பின் பட்டியலில் உட்கட்டமைப்பு துறையில் கொழும்பு 51.8 புள்ளிகளையே பெற்றுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--