Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 01 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து பெண்ணொருவருக்கு தனது அந்தரங்க உறுப்பை வெளிப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட விமானப்படை வீரர் ஒருவரை டிசெம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
பாதசாரிகளுக்கான மேம்பாலத்தில் நின்றுகொண்டிருந்த இச்சந்தேக நபர் அவரின் அந்தரங்க உறுப்பை வெளிப்படுத்தியதாகவும் இதனால் தான் மிகுந்த சங்கடத்திற்குள்ளானதாகவும் கோட்டை பொலிஸாரிடம் பெண்ணொருவர் முறைப்பாடு செய்திருந்தார். இச்சம்பவம் குறித்து கோட்டை பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தான் புகாரிட்;டதாகவும் அவர் கூறினார்.
கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மேற்படி விமானப்படை வீரர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டார். இச்சந்தேக நபர் விரும்பத் தகாதவகையில் பாலியல் அனுகூலத்தைப் பெற முயன்றதாகவும் இது குற்றவியல் கோவையின் 345 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதையடுத்து சந்தேக நபரை நாளை 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
pasha Friday, 02 December 2011 08:03 PM
சில பெண்கள் குட்டை பாவாடை அணிந்து மேம்பாலத்தால் செல்வதால் சில நேரம் ஆண்களும் சங்கடதுக்குள்ளாகிறார்கள். இதற்கு ஆண்கள் எவரும் வழக்கு போட்ட சரித்திரம் இல்லை.
Reply : 0 0
Risvi Friday, 02 December 2011 09:27 PM
பாஷா, சிலருக்கு பெண்களை கண்டாலே சங்கடம் ஏற்படலாம். அதற்கெல்லாம் வழக்கு போட ஏலாது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025