2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் பல பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் நாளை அதிகாலை 3 மணிவரையான 11 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

புதிய நீர் குழாய்களை இணைக்க வேண்டியுள்ளதாலும் பராமரிப்பு பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாலும் இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கிரேண்ட்பாஸ், மஹாவத்த, தொட்டலங்க, அலுத்கம, கொட்டாஞ்சேணை, மட்டக்குளிய, மாதம்பிடிய மற்றும் மோதர உட்பட பல பகுதிகளில் 11 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது..

இதேவேளை, பஞ்சிகாவத்தை வீதியின் ஒரு பகுதி, ஸ்ரீ சுமன திஸ்ஸ மாவத்தையின் எல்பின்ஸ்டன் திரையரங்கின் சந்தியிலிருந்து ஜேதவன வீதியின் சந்தி வரை, சங்கராஜ மாவத்தை உட்பட அதற்குட்பட்ட சகல வீதிகள், மாளிகாவத்தை வீதி, மாளிகாவத்தை தொடர்மாடி வீட்டு தொகுதி, அக்பர் ஒழுங்கை, பழைய சோனகத்; தெரு, மஹா வித்தியாலய வீதி, ஒயில்மன்ட் வீதி, க்ளேன் ஆபர் இடத்திலிருந்து கொள்ளுப்பிட்டி சந்திக்குட்பட்ட சகல இணை பாதைகள், ஆர். ஏ. டி. மெல் மாவத்தை, பம்பலப்பிட்டி சந்தியிலிருந்து கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரையான 12மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அச்சபை மேலும் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .