2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

உயிரிழந்தவர்களுக்கு யாழில் அஞ்சலி

Editorial   / 2017 மே 30 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எஸ்.ஜெகநாதன்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், தென்னிலங்கையில் உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். மாவட்டத்தின் 2017ஆம் ஆண்டின் இரண்டாவது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெறுகின்றது.

கூட்டத்தின் ஆரம்பத்தில், தென்னிலங்கையில்  இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில் இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .