2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கொக்கிளாய் விகாரை பற்றி எனக்கு தெரியாது

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களின் காணிகளை சட்டவிரோமான முறையில் அபகரித்து அமைக்கப்பட்டு வரும் விகாரை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது' என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மேற்படி சட்டவிரோத  விகாரை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் எனக்கு இதுவரையில் எதுவும் தெரியாது. அது தொடர்பில் விசாரித்து ஆராய்ந்தப் பின்னரே பதில் கூறமுடியும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .