2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

1.8 கிலோமீற்றர் நீளமான வீதி புனரமைக்கப்படவுள்ளது

Niroshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அக்கரை கிராமத்தில் 1.8 கிலோமீற்றர் நீளமான உள்ளக வீதி உலக வங்கியின் 9.7 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைக்கப்படவுள்ளதாக பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்கரை கிராமமான அக்கரை கிராமம், மழை காலத்தில் மக்கள் பயணிக்கமுடியாதவாறு வெள்ள நீர் நிரம்பி காணப்படும் பிரதேசமாக விளங்குகின்றது. இதனை கருத்திற்கொண்டு இங்குள்ள 1.8 கிலோமீற்றர் நீளமான வீதி, முதற்கட்டமாக கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.

வீதி அமைப்பு பணிகளின் குறை, நிறைகளை அறிந்து கொள்வதற்கு கிராம அலுவலர் தலைமையில் அபிவிருத்தி கண்காணிப்புக்குழு ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

புனரமைப்புப் பணிகள் இம்மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்படும் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .