2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

’புதிய தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாக வேண்டும்’

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலில் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டுமாயின், தமிழ் மக்கள் மத்தியில் புவிசார், பூகோள அரசியல் தொடர்பான விளக்கமுடைய புதிய தலைவர்கள் உருவாக வேண்டியது தற்போதைய காலத்தின் தேவையென, பிரபல அரசியல், சமூக ஆய்வாளர் எம். நிலாந்தன் வலியுறுத்தினார்.

“தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க அரசியல் தலையீடு செய்வோம்” எனும் தொனிப்பொருளில், அரசியல் தீர்வை வலியுறுத்தும் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்தரையாடலொன்று, யாழ்ப்பாணம் - நல்லூர் பவன் விருந்தினர் விடுதியில், இன்று (24) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

“தமிழ் மக்கள் மத்தியில் தற்போது காணப்படும் அரசியல் தலைவர்களில் இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்கு 80 வயதுக்கு மேலாகிறது. ஆகவே, தமிழ் மக்கள் தொடர்ந்தும் பழைய தலைவர்களேயே தெரிவு செய்வதை விடுத்துப் புதிய தலைவர்களைத் தேட வேண்டும். தமிழர் அரசியலில் புது இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்.

“நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் தங்களுக்குரிய பொதுவேட்பாளரைக் கண்டுபிடிக்காதது மாத்திரமன்றிக் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தலாமென்ற முயற்சியிலும் எங்களுடைய பெரும்பாலான சக்தி வீண் விரயமாகிவிட்டது. இதனால், தமிழ்மக்கள் பெரும் ஏமாற்றத்தை எதிர்கொண்டுள்ளனர்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .