2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

பலாலியில் துப்பாக்கி சூடு

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

பலாலி இராணுவ முகாமுக்குள், இன்று (04) அதிகாலை வேளையில்  புகுந்த மர்மநபர்கள், பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று (04) அதிகாலை பலாலி இராணுவ முகாமில் இருந்த 21 வயதடைய நிசாந்த என்ற  இராணுவ வீரர் ஒருவர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாகியது.

எனினும், இந்தச் செய்தியை மறுத்த பாதுகாப்புத் தரப்பினர், ஓட்டோவில் வந்த மர்மநபர்களே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறினர்.

இதில் படுகாயமடைந்த இராணுவ வீரர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X