2025 ஜூலை 07, திங்கட்கிழமை

55பேரை ஏமாற்றிய பெண் கைது

Menaka Mookandi   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வங்கியில் கடன் பெற்றத்தருவதாகக் கூறி, 55 பேரிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த ஊரெழு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை (12) இரவு கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் மற்றும் சிறுப்பிட்டி பகுதியிலுள்ள அரச வங்கியொன்றில், 5 இலட்சம் ரூபாய் கடன் பெற்றுத்தருவதாகக் கூறிய மேற்படி பெண், கடன் பெற விரும்பிய 55பேரிடம், தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்துள்ளார்.

இருப்பினும், உரிய கடனைப் பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றுவதை உணர்ந்த பணம் கொடுத்தவர்கள், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில், இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்தனர். இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பந்தப்பட்டப் பெண்ணை, அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

இந்தப் பெண், இதேபோல சுன்னாகம் பொலிஸ் பிரிவிலும் மக்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .