2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வடக்கில் 130 சட்டவிரோத மின் பாவனையாளர்கள் கைது

A.P.Mathan   / 2010 நவம்பர் 01 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்வெட்டித்துறை, நெல்லியடி பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்பாவனையில் ஈடுபட்ட 130 பேர் இன்று அதிகாலை விசேட பொலிஸ் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வடக்கிற்கு சென்ற விசேட பொலிஸ் பிரிவும் மின்சாரசபை பரிசோதகர்களும் சேர்ந்தே இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கைதுசெய்யப்பட்ட சட்டவிரோத மின்பாவனையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--