2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

15 வயது சிறுமி கடத்தி துஷ்பிரயோகம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

15 வயது சிறுமி கடத்தி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தேடி வலை வீசப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெறும் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்ப நடைபெற்றது. அதன் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வட்டுக் கோட்டைப் பகுதியில் 15 வயதுடைய சிறுமியை கடந்த யூலை மாதம் 26 ஆம் திகதி கடத்தி துஷ்பிரயோகம் புரிந்ததாக சங்கானை சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த சந்தேக நபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--