Super User / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடமராட்சி கிழக்கு குடத்தனை திறந்தவெளி இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர் என்று மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
வடமராட்சி கிழக்கைச் சொந்த இடமாகக் கொண்ட இவர்கள், வன்னியில் இடம்பெற்ற போர்காலச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்து செட்டிக்குளம், மிருசுவில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த நிலையில் வடமராட்சி கிழக்கு, குடத்தனை திறந்தவெளி இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுவரும் பகுதிகளையே இக்குடும்பங்களும் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் இவர்களையும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
57 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
4 hours ago
9 hours ago