2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்துக்கு புதிய அமைப்பாளர்

Super User   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக அன்ரன் தங்கதுஷாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான இந்த நியமனம் நேற்று கட்சியின் யாழ். அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சர் றோகன்ன திஸநாயக்கா, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இவருக்கான நியமனத்தை வழங்கினார்.

கட்சியின் யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளர் வே. தங்கராஜாவும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

இதில் போக்குவரத்துத் துறைப் பிரதி அமைச்சர் உரையாற்றுகையில்:
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பலம் வாய்ந்த கட்சி. இதனூடாக வடக்குக் கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு கருணாவும் தங்கராஜாவும் போதும்- என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--