Super User / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சங்கவி)
மதுபோதையில் மக்களுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபருக்கு, ஊர்காவற்றுறை பதில் நீதிபதி 6 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.
இது தொடர்பாகத் தெரியவந்துள்ளதாவது:
ஊர்காவற்றுறைப் பகுதியில் மதுபோதையில் ஊர் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடமாடிய நபர் ஒருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைதுசெய்தனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் இவர்மீதான வழக்குத் தாக்கலைச் பொலிஸார் மேற்கொண்டனர். வழக்கை விசாரணை செய்த ஊர்காவற்றுறை பதில் நீதிபதி ஜே.கஜநிதிபாலன் குறித்த நபருக்கு 6 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததுடன் குற்றப் பணத்தைக் கட்டத்தவறின் 3 மாதகாலத்துக்குச் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இவர் குற்றப் பணத்தைக் கட்டத் தவறியமையால் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
11 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago