Super User / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
கடந்த காலத்தில் இடம் பெற்ற போரினால் தாய், தந்தையரை இழந்த இருபது பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள், பால்மா மற்றும் குடைகள் என்பன அமரர் அ.மகிழம்மா ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது. உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் வன்னியில் இருந்து வந்து உறவினர்களுடன் வாழும் பிள்ளைகளுக்கு இந்த உதவியை அ.செல்வராசா வழங்கியுள்ளார்.
தாயாரின் மரணச் சடங்கிற்காக வெளிநாட்டில் வசிக்கும் பேத்தியார் அனுப்பிய பணத்தில் இருந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருள்கள் இவ்வாறு உதவியாக வழங்கப்பட்டுள்ளன.
உடுவிப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச அலுவலர், உளவளத்துணை உதவியாளர் எஸ். சந்திரகுமார், கலாசார அலுவலர் கே.கிருஸ்ணகுமார், நிர்வாகக் கிராம அலுவலர் என். நவரத்தினராசா ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


1 hours ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
05 Nov 2025