2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

நல்லூர் ஞானோதயாவில் இரு மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

கல்வியங்காடு புது செம்மணி வீதியில் அமைந்துள்ள நல்லூர் ஞானோதயா பாடசாஇலாயில் இருந்து பல வருட கால இடைவெளியின் பின்னர் இரண்டு மாணவர்கள் தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு புகழை ஏற்படுத்தியுள்ளாக்கள்

வறுமைக்கோட்டிற்;கு உட்பட்ட பொருளாதார சமூக ரீதியில் பி;ன்னடைவுகளை சந்தித்த பெற்றோர்களின் பிள்ளைகளே பௌதீகவள ரீதியாக பின்தங்கியுள்ள இப்பாடசாலையில் கல்வி  கற்று வருகின்றார்கள்.

இந்நிலையில் இந்தப் பாடசாலையில் இருந்து கடந்த பல வருடகால இடைவெளியின் பின்னர் சமகாலத்தில் இரண்டு பிள்ளைகள் சித்தி அடைந்துள்ளமை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களையும் பெரும் மகிழ்சிக்குள்ளாக்கியுள்ளது.

இப்பாடசாலையில் கல்வி கற்கும் ப.நிதுசன் 151 புள்ளிகளையும் சு.கயல்விழி 147 புள்ளகளையும் பெற்று சித்தி அடைந்துள்ளார்கள். பாடசாலையில் இருந்து 13 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியபோதிலும் பத்துப் பேர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று பரீட்சைத் தினைக்களத்தினால் முதல் தடவையாக வழங்கப்படவுள்ள சான்றிதழ்களைப் பெற தகுதி பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .