Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்ட மாணவர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நிதம்' நூல் வெளியிட்டுவிழாவும் கலைவிழாவும் மாணவமன்றத் தலைவர் மாசிலாமணி சிறில்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் குறித்த நூலினை குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி ஜெர்மையா விஸ்வநாதன் வெளியிட்டு வைக்க பிரபல வர்த்தகர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நீதிபதி அ.ஆனந்தராசா, மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அரியநாயகம், சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி கணேசராஜா, பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி அ.பிரேம்சங்கர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.


3 hours ago
5 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
15 Nov 2025