Super User / 2011 ஜனவரி 12 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்னால் யாழ். எலுவைதீவு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்ததிட்டமிட்டுள்ளதாக எலுவைதீவு கடற்தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய இழுவை படகுகள் தமது கடற் பிரதேசத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் தமது தொழில் பாதிக்கப்படுவதாக இந்த மீனவர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
முன்னர் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே தமது கடற் பிராந்தியத்தில் இந்திய இழுவை படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தார்கள்.
எனினும் தற்போது வாரத்தில் ஏழு நாட்களும் இந்திய இலுவை படகுகள் தொழிலில் ஈடுபடுவதாக எழுவைதீவு மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
இதேவேளை, இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் எழுவைதீவு மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
17 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
59 minute ago
2 hours ago